சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் அதிக அளவில், மாம்பழ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக, மாமரங்களில் நல்ல மகசூல் கிடைப்பதற்காக, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மா மரங்கள் தயார் செய்யப்படுவது வழக்கம். அதன்படி சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாமரங்களில் காய்ந்த இலைகளை அற்றுவது, பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிப்பது, தேவையற்ற கிளைகளை கழிப்பது, நீர் பராமரிப்பு, உரமிடுதல் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
இதன் மூலம், மாங்காய்கள் அதிக அளவில் காய்த்து, வைகாசி மாதங்களில் மாம்பழங்கள் அறுவடைக்கு தயாராகிவிடும் என மாம்பழ விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவு இருந்ததால், அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.