வியாசர்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரை தாக்கி , 3 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றி வரும் நபர்களை மடக்கி காவல் துறையினர் விசாரணை செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் சென்னை வியாசர்பாடி அசோக் பில்லர் அருகே அஜித் குமார் 24 , அஜய் குப்தா 22 , ஜெகதீஷ்வரன் 22 உள்ளிட்ட 3 பேரை பிடித்து வியாசர்பாடி போலீசார் நேற்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் கொடுங்கையூர் , எம்.கே.பி நகர் , ஓட்டேரி , புளியந்தோப்பு காவல் நிலையங்களில் அஜித் குமார் மீது 24 வழக்குகளும் , அஜய் குப்தா மீது 15 வழக்குகளும் , ஜெகதீஷ்வரன் மீது 5 வழக்குகளும் உள்ளது என்பது தெரியவந்தது.மேலும் , விசாரணைக்காக இவர்கள் 3 பேரையும் போலீசார் காவல் நிலையததில் வைத்துள்ளர். பாதுகாப்பிற்காக ஒரு உதவி ஆய்வாளர் பணியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அஜய் குப்தா, அஜித் குமார் இருவரும் காவல் நிலையத்தின் உள்ளையே சண்டையிட்டு கொண்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த கண்ணாடியை உடைத்து , எங்களை வெளியே விட வேண்டும் இல்லையெனில் உங்களை குத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.
இந்த சண்டையை உதவி ஆய்வாளர் தடுக்க சென்ற போது அவரை தாக்கி விட்டு 3 விசாரணை கைதிகளும் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினர்.இச்சம்பவம் குறித்து புளியந்தோப்பு துணை கமிஷ்னர் ராஜேஷ் கன்னா தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர். உதவி காவல் ஆய்வாளரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.