தமிழ்நாடு

பல்லி இருந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை...

கடையில் வாங்கிய  குளிர்பானத்தில் பல்லி இருந்ததால் அதனை குடித்து  மயங்கி விழுந்த பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியான அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பெயின்டிங் வேலைக்கு சென்று வருகிறார்.இவரது மனைவி மேனகா இவர்களுக்கு பிரதீப் என்ற 12 வயது மகன் உள்ளான். பள்ளி விடுமுறை என்பதால் பிரதீப் இன்று காலை அனுமந்தநகரில் உள்ள கடையில் tilo என்ற பெயர் கொண்டகுளிர்பணம் வாங்கி குடித்துள்ளார்.

  குளிர்பானம் குடித்துக்கொண்டிருந்த பொழுது மாணவன் பிரதீப்பாட்டிலில் ஏதோ இருப்பதை பார்த்துள்ளான் பாட்டிலை பார்க்கும்போது பாட்டில் அடியில் இறந்த பல்லி கிடந்துள்ளது. அதை பார்த்தவுடன் அதேஇடத்தில் சிறுவன் மயங்கிக் கீழே விழுந்துள்ளான்  கீழே விழுந்த பிரதீப்பை அவரது தாய் மற்றும் உறவினர்கள் மாணவனை சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 தற்போது மாணவனுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குளிர்பானத்தில் பல்லி விழுந்த கிடந்த சம்பவத்தின் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.