தமிழ்நாடு

"அட்லீ படமா?.. இல்லை ஆளுநர் உரையா?" - சிவசங்கரின் விமர்சனம்! கொதித்தெழுந்த ராஜ்மோகன்.. Thug பதிலடி கொடுத்த திமுக MLA!

அட்லீக்கும் சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்?

Muthu Lakshmi

இயக்குனர் அட்லீ படங்களை ஒப்பிட்டு சட்டப்பேரவையில் பேசிய திமுக MLA சிவசங்கருக்கு, அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் அட்லீ பல்வேறு படங்களின் காட்சிகளை எடுத்து புதிய படம் எடுப்பார் எனும் கோணத்தில், “அட்லீ போல் எங்கள் ஆட்சியின் திட்டங்களை வெட்டி ஓட்டி நடத்துகிறார்கள்” என்று விமர்சித்திருந்தார். அதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்த பள்ளி கல்வி துறை, “அட்லீக்கும் சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? காலங்களும் காட்சிகளும் மாறிவிட்டன” என்றும் கருத்து தெரிவித்தார்..
அதற்கு பதிலளித்த திமுக MLA சிவசங்கர் “அட்லீ பற்றி மட்டும் இல்லை; சட்னி குறித்தும் பேசுவேன்” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவு கருத்து தெரிவித்தனர். மேலும் தவெக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்துமே திமுக அரசு கொண்டு வந்தது என்றும் அதற்கு பெயர்களை மாற்றி தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுகவினர் கருத்து தெரிவித்தனர்.

அதையடுத்து முன்னாள் அமைச்சர் சிவகுமார், நல்ல படங்களின் காட்சிகளை எடுத்து, தனது படங்களை இயக்குனர் அட்லீ எடுப்பது போல, எங்கள் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நல திட்டங்களை, தற்போதைய அரசு செயல்படுத்துவது போல சித்தரிக்கப்படுவதாக விமர்ச்சித்தர். புதிய அரசு ஆட்சி அமைக்கும் போது புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் ஆனால் முன்னாள் அரசு செயல்படுத்திய திட்டங்களை பெயர் மாற்றி கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தவெக அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்