மேகதாது அணை குறித்து விவாதிப்போம் என்ற காவிரி ஆணைய தலைவரின் கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகிற 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இவ்விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.