கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயின் பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கேட்டிருந்த நிலையில் 27 ஆயிரம் பேர் வந்திருந்ததாக தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டி இருந்தார்.
போலீஸ் அளித்த முதல் தகவல் அறிக்கையில், பரப்புரை நடந்த இடத்திற்கு விஜய் 5 நேரம் தாமதமாக வந்ததே காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த பரப்புரையில் மக்களுக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனை அடிப்படையாக வைத்து விஜய் மீது வழக்கு பதிந்து விஜய் -யை கைது செய்யலாம். ஆனால் திமுக அரசு விஜயை கைது செய்ய தயக்கம் காட்டுவதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் விஜய் மீது மக்களின் கோவம் முழுமையாக திரும்பவில்லை. சிலர் இது திமுக -வின் சதி என்கின்றனர். ஆனால் சிலர் இது விஜய் -ன் தவறுதான் என்கின்றனர்.
ஆனால் இந்த சூழலில் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த மாதிரியான சட்ட மற்றும் உளவியல் சிக்கல்கள் எல்லாம் விஜய் -க்கு புதிது. இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் தான் விஜய் தேசிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
எடப்பாடி -ன் போன் கால்..!
இந்த கரூர் விவகாரம், அதிமுக -விற்கு குறிப்பாக எடப்பாடிக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 6 -ஆம் தேதி விஜய் -உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போனில் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. அப்போது கரூர் துயரத்திற்கு ஆறுதல் தெரிவித்து இந்த விஷயத்தில் முழு ஆதரவு தர விரும்புவதாகவும் மேலும், கூட்டணி குறித்த விஷயங்களை பேச அழைப்பு விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு விஜய் -ம் பொங்கல் கழித்து சொல்வதாக சொல்லியுள்ளாராம்.
ஆனால் எடப்பாடியை விஜய் -யிடம் பேசச்சொல்லி கேட்டுக்கொண்டதே பவன் கல்யாண் தானாம்.
மேலும் விஜய் -யிடமும் பேசிய பவன் கல்யாண் இந்த சூழலில் கூட்டணி துணையின்றி தனித்து நின்றாள் திமுக உங்களை விழுங்கி விடும், எனவே இந்த தருணத்திற்க்கு அதிமுக - பாஜக உடன் கூட்டணி வைப்பதே நல்லது” என அறிவுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.