ramadoss  
தமிழ்நாடு

இரண்டாக உடைகிறதா பாமக!!? "அய்யாவோடு இறுதிவரை இருப்பேன் என சொல்லும் மணி" ராமதாஸின் அடுத்த மூவ் என்ன!?

ஒவ்வொரு நாளும் இரு தரப்பிலிருந்தும் வரக்கூடிய செய்திகள் கட்சியில் அனைவருக்கும் குழப்பத்தையும், வேதனையையும் தருகிறது. ...

Saleth stephi graph

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்த பாமக கௌரவத் தலைவர் மணி இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸோடு இறுதிவரை பயணம் செய்வது என உறுதியாக உள்ளேன். பாமக  தமிழ்நாட்டில் ஒரு வலிமையான கட்சியாக பேசப்பட்ட நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு குழப்பமான சூழ்நிலை காரணமாக என்னைபோலவே, கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கும் கடுமையான மன உளைச்சல் உள்ளது. ஒவ்வொரு நாளும் இரு தரப்பிலிருந்தும் வரக்கூடிய செய்திகள் கட்சியில் அனைவருக்கும் குழப்பத்தையும், வேதனையையும் தருகிறது.  இந்த நிலை மாற வேண்டும். மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும்.

இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசினால் தீர்வு ஏற்படும். பாட்டாச்சி மக்கள் கட்சி பழைய நிலைமைக்கு மேல் கொண்டு ஆட வேண்டும் அதற்கு இருவரும் பேசி நல்ல தீர்வு எட்ட வேண்டும். 

கொறடா மாற்றுவதற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது, இதற்கு மருத்துவர் ஐயாவும் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். கொரடா தொடர்பாக எந்த பிரச்சினையும் வராது. இன்னும் ஓராண்டு கூட பதிவி காலமில்லை. 

இருவரும் பொறுப்பாளர்களை நியமிப்பதும், நீக்குவதும் தீர்வாக அமையாது. குழப்பத்தை தான் ஏற்படுத்தும். 

மருத்துவர் அய்யா வழியில் எல்லோரும் நடக்க வேண்டும். மருத்துவர் அன்புமணிய கட்சியில் முன்னிலைப்படுத்தி, முதல் வேட்பாளர் என அறிவித்துள்ளோம். அன்புமணியை வலிமைப்படுத்தியுள்ளோம் இரு சக்திகளும் ஒன்றாக சேர்ந்தா தான் வலிமையாக இருக்கும். இல்லையென்றால் நலிவு தான் ஏற்படும் என்றார்.

தற்போது மதிமுக உள்ளிட்ட சில காட்சிகள் திமுக -விலிருந்து வெளியேறினாலும், பாமக -வை திமுக உடன் இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை ஈடுபட்டுள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தார், அவர் மரியாதையை நிமித்தமாக தான் சந்தித்ததாக கூறினாலும் அது அரசியல் ரீதியான சந்திப்பு தான் என விமர்சகர்கள் பலர் கூறியிருந்தனர்.

ஆனால் ராமதாஸை சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகையின் பேச்சு பாமக -திமுகவில் இணைவதையே பிரதிபலிக்கிறது. சமீபத்தில்  "2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்" என செல்​வப்​பெருந்​தகை பேசியிருந்தார். மேலும் சமீப காலங்களில் பாமக நிறுவனரும் திமுக -எதிரான கருத்துக்களை பேசவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு இடமாக மாறியுள்ளது. இந்த சம்பவங்கள் மட்டுமே திமுக - பாமக கூட்டணியை அமைக்காது. இதற்கு பெரும் இடையூறாக திருமா இருக்கிறார். திருமா ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார் ஒருபோதும் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக தொடராது என்று.. ஆனால் ஒருவேளை அன்புமணி பாமக மற்றும் ராமதாஸ் பாமக என இரு  அணிகளாக பாமக உடையுமேயானால் அப்போது ராமதாஸ் பாமக -உடன் விசிக செல்ல வாய்ப்புண்டு என்ற தகவல்களும் கசிகின்றன.

பொதுக்குழுவிற்கு பிறகு என்ன நடக்கும் 

ஒருவேளை பொதுக்குழுவில் ராமதாஸ் அன்புமணியின் பதவியை அதிகாரபூர்வமாக பறித்தால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். ஏற்கனவே ஓபிஎஸ் எடப்பாடி குரானிலும் இதேதான் நடந்தது. இந்நிலையில் இந்த முறை மீண்டும் தொடருமேயானால் அது பாமக -விற்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.