tvk vs dmk  
தமிழ்நாடு

விஜய் -யை கைது செய்ய தயங்குகிறதா திமுக..!? “விஜய் மீது இன்னும் 'Soft Corner' இருக்கு.. விமர்சகர்கள் சொல்வது என்ன!?

இந்த சூழலில் ஒருவேளை திமுக விஜயை கைது செய்தால் அது திமுக -விற்குத்தான் ...

மாலை முரசு செய்தி குழு

கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.

ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர்.  மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய  இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயின் பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கேட்டிருந்த நிலையில் 27 ஆயிரம் பேர் வந்திருந்ததாக தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்த சூழலில்தான் இந்த பரப்புரையை ஏற்பாடு செய்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் விஜய் பரப்புரை முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்ட கட்சியின் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்த நிலையில்,  இவர்களை கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். தற்போது தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் கைது செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இவரை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் வலுத்து வருகிறது. 

காரணம் போலீஸ் அளித்த முதல் தகவல் அறிக்கையில், பரப்புரை நடந்த இடத்திற்கு விஜய் 5 நேரம் தாமதமாக வந்ததே காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த பரப்புரையில் மக்களுக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனை அடிப்படையாக வைத்து விஜய் மீது வழக்கு பதிந்து விஜய் -யை கைது செய்யலாம். ஆனால் திமுக அரசு விஜயை கைது செய்ய தயக்கம் காட்டுவதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் விஜய் மீது மக்களின் கோவம் முழுமையாக திரும்பவில்லை. சிலர் இது திமுக -வின் சதி என்கின்றனர். ஆனால் சிலர் இது விஜய் -ன் தவறுதான் என்கின்றனர்,

இந்த சூழலில் ஒருவேளை திமுக விஜயை கைது செய்தால் அது திமுக -விற்குத்தான் பாதகமாக அமையும் என்பது திமுக -விற்கு நன்றாக தெரியும். மேலும் விஜய் -ன் மீது இருக்கும் ‘soft corner’ திமுக மீது கோவமாக கூட வாய்ப்புண்டு.தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருப்பதால் திமுக இந்த விஷயத்தில் பொறுமையாகத்தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.