தமிழ்நாடு

மகளிர் உரிமை தொகை நிதி மடைமாற்றமா? அண்ணாமலை கேள்வி!

Tamil Selvi Selvakumar

மகளிர் உரிமை குறித்த குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகையை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பட்டியலின பிரிவினர்களுக்கான சிறப்பு நிதியைப் பயன்படுத்துவதாக தமிழ்நாடு அரசு மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மகளிர் உரிமை குறித்த குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய நிதியை ஒதுக்காமல், பட்டியலின சமுதாய மக்களின் நலநிதியை மடைமாற்ற முயற்சித்தால் அது வன்மையாகக் கண்டிக்கதக்கது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசியவர், மகளிர் உரிமை குறித்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.