தமிழ்நாடு

"ஜனநாயகத்தை கொல்வது ஆளுநரின் பணி அல்ல" - டி.கே.எஸ்.இளங்கோவன்

Malaimurasu Seithigal TV

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே ஆளுநரின் பணியே தவிர, அதனைக் கொல்வது அல்ல என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்ட 10 மசோதாக்களும் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில நலனுக்காக நியமிக்கப்பட்ட ஆளுநர், மசோதாவை நிறுத்திவைப்பதும், நிராகரிக்காமல் இருப்பதும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என டி.கே.எஸ் இளங்கோவன் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

மசோதாக்கள் மீது சந்தேகமிருப்பின் அரசிடம் விளக்கம் கேட்கலாமே தவிர, அதன்மீது எந்த முடிவையும் ஆளுநர் எடுக்காமல் இருக்கக் கூடாது எனவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே ஆளுநரின் பணியே தவிர, அதனைக் கொல்வது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.