தமிழ்நாடு

காசு பணத்தை விட...ஒவ்வொருவரும் இதில் தான் சாதிக்கின்றனர்...அன்பில் மகேஷ் சொல்வது என்ன?

Tamil Selvi Selvakumar

காசு பணத்தை விட கல்வியில் தான் ஒவ்வொரு மனிதனும் சாதிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி:

ராமநாதபுரம், திருவாடனை, பரமக்குடி, முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களின் கல்வி செலவிற்காக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தலைமையில் நடைபெற்றது. 

அன்பில் மகேஷ் பெருமிதம்:

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனையும் காசு பணத்தை விட கல்விதான் அவர்களை அறிவார்ந்த மனிதர்களாக மாற்றுகிறது என்று பெருமிதம் தெரிவித்த அமைச்சர், ஒரு மனிதன் கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறி பலருக்கும் உதவி செய்ய முடியும் என கூறினார். எனவே, தற்போது கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களாகிய தாங்களும், கல்வியை நல்ல முறையில் படித்து பலருக்கும் கல்வி உதவித் தொகை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.