தமிழ்நாடு

ஊழல் பட்டியலை வெளியிட்டது பாஜகவே.....!!

Malaimurasu Seithigal TV

ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார் என்று சொல்வதை விட பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு உள்ளது என்று தான் சொல்வதுதான் சரியாக இருக்கும்.  எதிர்க்கட்சி தலைவர் பேச்சை இருட்டடிப்பு செய்கின்ற சூழல் உள்ளது என்றால் எந்த அளவிற்கு சட்டமன்ற ஜனநாயகம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை அருகில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் தொடங்கி வைத்தார்.  பொது மக்களுக்கு தர்பூசணி வெள்ளரி மோர் சர்பத் உள்ளிட்ட பொருட்களை அவர் வழங்கினார்.  இதில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  அதனை தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:

ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார் என்று சொல்வதை விட பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு உள்ளது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை ஆண்டு கொண்டு இருப்பதால் அவர்களுக்கு பல்வேறு தரவுகள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறிய அவர் எனவே பாஜக கொடுத்ததாகவே நான் கருதுகிறேன் என்று கூறினார்.