தமிழ்நாடு

டிடிவி தினகரன் - ரோஜா திடீர் சந்திப்பு...செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற அமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

மதுரையில்  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும், ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜாவும் திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகிற 2 ஆயிரத்து 24-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 175 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும், இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருகிறார் என்றும், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் சூப்பராக உள்ளதாகவும், ஆந்திர மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சி இரண்டையுமே இரண்டு கண்ணாக முதலமைச்சர் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, டி.டி.வி.தினகரனுடன் மதுரையில் நடைபெற்ற திடீர் ரகசிய சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் ரோஜா எதுவும் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

முன்னதாக, மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜாவும் திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.