தமிழ்நாடு

கைதிகளுடன் உணவருந்திய சிறைத்துறை டிஜிபி....!

Malaimurasu Seithigal TV

சென்னை புழல் சிறையில் கைதிகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் சிறைத்துறை நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும், சிறையில் என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்வதற்க்காக புதிதாக  பொறுப்பேற்ற டிஜிபி அம்ரேஷ் புஜாரி இன்று புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் சிறையில் இருக்கக்கூடிய மருத்துவமனை, தொழிற்சாலை ஆகியவற்றை பார்வையிட்டு, சிறைவாசிகளிடம் அவர்களின் மனக்குறைகளை டிஜிபி கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து சிறைவாசிகளுடன் மதிய உணவை ஒன்றாக தரையில் அமர்ந்து டிஜிபி அம்ரேஷ் புஜாரி உணவருந்தினார்.