தமிழ்நாடு

மரத்தில் ஜீப் மோதி விபத்து; தாய், மகன் உயிாிழப்பு

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்று விட்டு  திரும்பியபோது மரத்தின் மீது ஜீப் மோதியதில் தாய்- மகன் பாிதாபமாக உயிாிழந்தனா். நீலகிரி மாவட்டம், குழிசோலையை சோ்ந்த மோகன்ராஜ் குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலில் நோ்த்திக்கடன் செலுத்திவிட்டு ஜீப்பில் திருச்சி மாவட்டம் வையம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனா்.

கெச்சாணிப்பட்டி பகுதியில் சென்றபோது ஜீப் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோகன்ராஜ், தாய் அழகுமணி ஆகியோா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா். மனைவி நித்யா, மகன் லித்துன் ஆகியோா் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில் வடமதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.