தமிழ்நாடு

தமிழகத்தில் 54,041 பேருக்கு வேலை: இன்று கையெழுத்தாகிறது ஒப்பந்தம்!

33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17297 கோடி முதலீட்டில் 54041 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைப்பெற உள்ள இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், வழிக்காட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கர்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, லாஜிஸ்டிகஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, Capital land, Adhani, JSW, ZFWAVCO உள்ளிட்ட நிறுவங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளனர்.

அதுமட்டுமின்றி,14 திட்டங்களுக்கும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மொத்தம் 47 திட்டங்கள் மூலம், 28664 கோடி முதலீட்டில்,82400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் இன்று திட்டங்கள் தொடங்கு வைக்கப்பட உள்ளது