தமிழ்நாடு

மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏன் சுடுகாடு கேள்வி எழுப்பிய ஜான் பாண்டியன்

Malaimurasu Seithigal TV

மாபெரும் பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தார்.தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாலை சிக்கல் பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் - ஜான் பாண்டியன் பேசுகையில்

99 % வெறியேற விருப்பம் 

பட்டியல் இனத்திலிருந்து வெளியேற 99 சதவீத தேவேந்திரகுல வேளாளர் மக்கள் விரும்புகின்றனர். இதனை வலியுறுத்தி தமிழக முழுவதும் சுமார் 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில்  குடிநீரில் மலம் கலந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை தமிழக அரசு மறைக்க பார்க்கிறது. உண்மையான குற்றவாளிகள் யார் என்று அரசுக்கு தெரியும் உடனே கைது செய்ய வேண்டும். திமுக ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.  

பணநாயகம் தான் வெற்றி

ஈரோடு தேர்தல் வெற்றி வாய்ப்பு என்பது ஜனநாயகத்தை விட பணநாயகம் தான் வெற்றி பெற்றுள்ளது. இது நல்லது அல்ல. அரசு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது இராமநாதபுரத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் 800 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மின் மயானம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நகரில் பல காலியான இடங்கள் உள்ள நிலையில் மக்கள்  வசிக்கும் இடத்திற்கு அருகே மயானம் அமைப்பது ஏன் என தெரியவில்லை. இந்த பணிகளை தடுக்க  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.மின்மாயானம் அமைப்பதால்  கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது தமிழக அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கின்றேன் என்றார்.