தமிழ்நாடு

மதிப்பெண்களை மதிப்பில்லாத எண்களாக மாற்றிய மத்திய அரசு - கி.வீரமணி குற்றச்சாட்டு

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய மதிப்பெண்களை மதிப்பில்லாத எண்களாக மத்திய அரசு மாற்றியுள்ளதென, கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Suaif Arsath

திண்டிவனம் காந்தி சிலை அருகில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை ஒருபோதும் பா.ஜ.க. ஆளமுடியாது என்றும், இதனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் விளக்கமளித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு சாதியின் பெயரால் தலித்துகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான ஒரு அமைப்பாக செயல்படுகிறதென குற்றம் சாட்டினார்.