தமிழ்நாடு

தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை...!

Tamil Selvi Selvakumar

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

எந்த முடிவையும் அறிவிக்காத கமல் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் ஒவ்வொரு கட்சிகளும் அவர்களது நிலைப்பாட்டை அறிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

ஈவிகேஎஸ் - கமல் சந்திப்பு :

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தனது நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.