காஞ்சிபுரத்தில் உள்ள பருத்தி குளம் பாரதி செட் பின் பகுதியில் வசித்து வருபவர் காத்தவராயன். இவரது மகள் 19 வயதுடைய கார்த்திகா இவருக்கும் நீலகண்ட புறத்தில் வசிக்கும் சங்கீதா என்பவற்றின் மகன் 22 வயதுடைய பசுபதி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கார்த்திகா காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BBA முதலாமாண்டு படித்து வந்துள்ளார், இரு வீட்டாரையும் எதிர்த்து கார்த்திகா மற்றும் பசுபதி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிறிது காலத்திற்கு பிறகு பசுபதியின் வீட்டில் இருவரையும் ஏற்றுக்கொண்ட நிலையில், தம்பதியினர் பசுபதி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
தற்போது கார்த்திகா 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்,பசுபத்துக்கும் கார்த்திகாவுக்கும் தகராறு ஏற்பட்டு கார்த்திகா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் இரு வீட்டாரும் மாறி மாறி தூக்கிக்கொண்டு போலீசில் புகாரளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பசுபதி தரப்பில் இருந்து பேசிய, பசுபதியின் தாய் சங்கீதா “எனது மகன் பசுபதியும் கார்த்திகாவும் நீண்ட நாட்கள் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நாங்களும் சரி கார்த்திகாவின் பெற்றோரும் சரி இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் எனது மகனின் மீது நான் வைத்திருந்த பாசத்தினால் இருவரையும் ஏற்றுக்கொண்டு வீட்டில் சேர்த்துக் கொண்டேன்.
கார்த்திகை கர்ப்பமாக இருப்பதை அறிந்த கார்த்திகாவின் பெற்றோர் இருவரிடம் நன்றாக பேசி பழகினர். அப்போதும் எனது மகனை ஆள் வைத்து கண்காணித்த கார்த்திகா தரப்பினர். எனது தம்பி வீட்டிற்கு பசுபதி சென்ற போது அங்கு சென்று எனது மகனை தாக்கியுள்ளனர். அங்கு விரைந்து சென்ற நான் எனது மகனை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினேன். நான் சொன்னதை கேட்டு என் மகனும் வீட்டிற்கு சென்ற நிலையில் வீட்டிற்கு முன்பு காத்திருந்த கார்த்திகாவின் அதை மகன் மற்றும் அவனது நண்பர்கள் எனது மகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். எனவே அவர்களிடமிருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசில் புகாரளித்துள்ளோம்” என கூறியுள்ளார்.
இதையடுத்து இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திகா “ நானும் பசுபதியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு 20 நாட்கள் மட்டுமே பசுபதி என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். பின்னர் குடித்திவிட்டு அடிப்பது கஞ்சா உபயோகிப்பது என்மேல் சந்தேகப்படுவது என்று என்னை கொடுமை செய்தார். என்னிடம் போன் கொடுப்பதில்லை, பசுபதி வெளியில் சென்றால் கூட என்னை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு தான் செல்வார்.
நான் கர்ப்பமாக உள்ள நிலையில் அது எனது குழந்தையே இல்லை என சந்தேகப்பட்டு என்னை அடித்தார். எனவே நான் DNA ரிப்போர்ட் எடுத்து அது அவருடைய குழந்தைதான் என நிரூபித்தும் கூட என்னை நம்பவில்லை. இது குறித்து நான் எனது பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்கள் நீ செய்திருந்தது தவறி என்றாலும் நீ எங்கள் பிள்ளை, என கூறி என்னை வீட்டிற்கு அழைத்தார்கள்.
அங்கு வந்து தகராறு செய்து மீண்டும் என்னை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற பசுபதி, கர்ப்ப காலத்தில் எனக்கு அரசு வழங்கிய உதவி தொகையை கேட்டு சித்திரவதை செய்தார். அதுமட்டுமில்லாமல் என்னையும் எனது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை கேட்டு சமாதானம் செய்ய போன எனது மாமன் மகன் தினேஸை பசுபதி தான் முதலில் அடித்தார் பின்னர் தற்காத்துக் கொள்ளவே இவர்கள் தாக்கினார்கள்” என தெரிவித்துள்ளார். இருவீட்டாரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.