தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் | மீனவர் நலத்துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. மேலும் திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார்.
இன்று சட்டமன்ற பேரவையில் கலந்துகொள்வதற்காக கவுண்டம்பாளையம் தவெக MLA கனிமொழி வருகை தந்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த, “2029 பிரதமர் வேட்பாளர் நமது தலைவர் தளபதி தான்.. 2025-ஆம் ஆண்டிலும் இதே போன்ற கேள்விகள் தான் என்னிடத்தில் கேட்கப்பட்டன” என்றும் “2026 தேர்தலில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே பார்த்தது” என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் "2029-ல் இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவதில்லை, தமிழ்நாட்டில் தான் முடிவு செய்ய போறாங்க.. இந்த அதிர்ச்சிகரமான அரசியல் மாற்றம் நிகழும் 2029 ல் கண்டிப்பாக பார்ப்போம்” என்றும் குறிப்பிட்டார்.
"தளபதியை CM சீட்-ல அமர வைத்ததில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முக்கியப் பங்கு உண்டு.. அதே போல அவரே தான் தளபதியின் கையைப் பிடித்துக் அழைத்துச் சென்று அமர வைப்பார்". இங்கிருந்தே பிரதமர் உருவாவாரா? அப்படி வந்தால் தமிழ்நாட்டில் CM யார்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதை அடுத்தடுத்து பொறுத்திருந்து பார்க்கலாம் என அவர் பதிலளித்தார்.
அதையாடுது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் MLA தாரகை கத்பர்ட், "அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல்காந்தி.. விஜய் ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் தவெக MLA-கள் இன்னும் ரசிக மனப்பான்மையில் இருக்கிறார்கள். 2029 ல் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் காங்கிரசுக்குள் எந்த குழப்பமும் இல்லை" என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக MLA-க்கள் கட்சியின் தலைவர் விஜய் தான் அடுத்த பிரதமர் என்றும் அதற்கு மாற்று கருத்தாக காங்கிரஸ் கட்சியினர் ராகுல் தான் வேட்பாளர் என்றும் தெரிவித்து வருகின்றனர். மேலும் “இதை தவெக ஏற்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்” என்றும் “தவெகவினர் ரசிக மனப்பான்மையில் பேசி வருவதாகவும்” தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியா கூட்டணி அமையுமா அல்லது புதிய கூட்டணி உருவாக்கப்படுமா என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெற்றால் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற விவாதங்கள் இரு கட்சிக்கு மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.