தமிழ்நாடு

“காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு... கர்நாடகாவில் முதல்வர் விஜய் போஸ்டரை கிழித்த போராட்டக்காரர்கள்!

தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது என்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து

Muthu Lakshmi

காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தமிழ்நாடு முதல்வர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு. கர்நாடகாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் ஜூலை 23 தேதி வெளியன் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்படும் தியேட்டரின் முன்பு கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜனநாயகம் திரைப்பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர். 

ஜூலை 28ம் தேதி காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் காவிரி நீர் திறந்துவிட கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. “உச்​ச நீ​தி​மன்​ற தீர்ப்பின்படி கர்​நாடகா தமிழகத்​திற்கு வழங்க வேண்டிய நீரை மாத​வாரி​யாக வழங்​க​வில்​லை. இதனால் பாசனத்​திற்​காக மேட்டூர் அணை இன்​னும் திறக்​கப்​பட​வில்​லை. எனவே கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நீரை உடனடி​யாக திறந்​து​விட உத்​தர​விட வேண்​டும்” என கோரிக்கை விடுத்தது.

ஆனால் கர்நாடக அரசு, அணைகளில் 50% நீர் மட்டுமே இருப்பு இருப்பதாகவும், மாநில குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் உள்ளதாகவும் தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட இயலாது என்றும் மறுத்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 3500 கன அடி நீரை திறந்​து​விட வேண்டும் எனவும் 29 தேதி காலை 8 மணிக்கு இரு மாநில எல்லையான பிலிகுண்​டுலு அளவீட்டு நிலை​யத்​தில் இருந்து தண்ணீர் திரைப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார், நீர்ப்​பாசனத்​துறை அமைச்சர் மற்றும் நீர்ப்​ பாசனத்​துறை அதி​காரி​களு​டன் நேற்று அவசர ஆலோ​சனை மேற்​கொண்​டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீர்ப்​பாசனத்​துறை அமைச்​சர் “குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது என்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வர்  டி.கே.சிவகு​மாரை தமிழக முதலவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேகதாது ஆணை மற்றும் காவிரி நீர் திறப்பு போன்ற கோரிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் கன்னட அமைப்பினர், முதல்வர் விஜயின் பட போஸ்ட்டரை கிழித்து காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.