தமிழ்நாடு

கர்நாடக அரசு எதிரி நாட்டைப் போல் செயல்படுகிறது” - அமைச்சர் துரைமுருகன்

Malaimurasu Seithigal TV

காவிரி விவகாரத்தில் எதிரி  நாட்டோடு சண்டை  போடுவது போல கர்நாடக அரசு செயல்படுகிறது என்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

நாளை முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2600 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு திங்களன்று பரிந்துரைத்தது.

இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:- 

நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 13 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர்  குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து , உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் கர்நாடக அரசு முரண்டு பிடிப்பதாக சாடிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றார்.