தமிழ்நாடு

பிரதமர் பெயரை கெடுக்க பாதிரியார் பொன்னையாவை முதல்வரே அனுப்பி வைக்கிறார்- கரு.நாகராஜன்

பிரதமருக்கும், பாஜகவிற்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக பாதிரியார் பொன்னையா போன்ற டூல்கிட் தீயசக்திகளை முதல்வர் ஸ்டாலினே அனுப்பி வைத்துள்ளார் என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

பிரதமருக்கும், பாஜகவிற்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக பாதிரியார் பொன்னையா போன்ற டூல்கிட் தீயசக்திகளை முதல்வர் ஸ்டாலினே அனுப்பி வைத்துள்ளார் என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்.கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கரு.நாகராஜன், "தேசிய புலனாய்வு பிரிவில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஜாமின் மறுக்கப்பட்ட ஸ்டெயின் சுவாமி என்ற தேசத்துரோகியின் அஸ்திக்கு மாநிலத்தின் முதல் அமைச்சரே அஞ்சலி செலுத்தியது தவறு என்றார்.

மேலும் பாதிரியார் பொன்னையா போன்று சாதி மத மோதலை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்றார். மேலும் தொடர்ந்த அவர், திட்டமிட்டு பிரதமருக்கும், பாஜகவிற்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற டூல்கிட் எனும் தீயசக்திகளை ஸ்டாலினே அனுப்பி வைத்துள்ளார் என்றே குற்றம் சாட்டுகிறேன் என்றார்.