மதப்பிரச்சனையை அதிகமாக்கியும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியும் வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் மோடி நினைத்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகளாக இருந்தபோது கெட்டதை கூட தைரியமாக செய்ததாகவும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது நல்லதை கூட ஜாக்கிரதையாக பலமுறை யோசித்து சிந்தித்து செய்ய வேண்டிய நிலை உள்ளதாக கூறினார்.
மேலும், திமுக குடும்ப அரசியல் செய்வதாக பேசிய பிரதமர் மோடியின் விமர்சனத்தைச் சுட்டிக் காட்டியவர், ஆமாம் உண்மைதான் திமுக குடும்ப அரசியல் தான் நடத்துகிறது; தமிழ்நாடுதான் கருணாநிதியின் குடும்பம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளதாகவும், அதனால் தான் அவர் கீழ் இறங்கி பேசி வருவதாகும் கூறினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.