thirumavalavan 
தமிழ்நாடு

கொலையாளி சுர்ஜித்தின் தாயை கைது செய்வதில் என்ன தயக்கம்?! தமிழக அரசின் செய்லபாடுகள் அதிர்ச்சி அளிக்கிறது!! -விசிக தலைவர் வேதனை!

ஆணவக்கொலை சட்டம் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கருத்து எதுவும் சொல்லவில்லை...

Saleth stephi graph

பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்தவர் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், இவரது மனைவி மணி முத்தாறு பட்டாலியனிலும் வேலை பார்த்து வருகின்றனர்.  இவர்களது மகன் சுர்ஜித். இவர்தான் கவினை குத்தி கொலை செய்துள்ளார்.

கரணம் சுர்ஜித் அக்காவும், கவினும் பலகாலமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தனது அக்காவோடு பேசக்கூடாது என பலமுறை கவினை எச்சரித்துள்ளனர் இந்த படுகொலை போலீஸ் குடும்பத்தாரின் பின்னணியில் நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலமாகியுள்ளது.

சென்னை  விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நெல்லை மாவட்டம் மென்பொருளாளர் கவின் ஆணவ படுகொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கவிதை கொலை செய்த அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது ஆனால். சுர்ஜித் மற்றும் அவரது தாய் தந்தை ஆகிய மூன்று பேரின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது .ஆனால் கொலை செய்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது அவரது தாயை கைது செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்.? 

உடுமலை சங்கர் ஆணவ படுகொலையில் குடும்பத்தினர் யாரும் நேரடியாக தலையிடவில்லை கூலிப்படையை ஏவிவிட்டு படுகொலை செய்தார்கள் ஆனால், கௌசல்யாவின் தாய் தந்தை உறவினர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள். 

 இதே கோரிக்கையைதான்  கவின் பெற்றோர்களும் எழுப்புகிறார்கள் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் கடமைகளை ஆற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ள சூழலில் சிபிசிஐடி காவல்துறையினர் நேர்மையாக நடந்து பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

இது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல வடமாவட்டங்களில் மட்டுமல்ல மேற்கு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக 10 ஆண்டுகளாக சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் சாதி பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறார்கள் சாதி பெருமிடத்தின் அடிப்படையில் இது போன்ற கொலைகளை ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள் வட இந்திய மாநிலங்களில் தான் இது போன்ற படுகொலைகள் அவ்வப்போது நடக்கும். இப்போது தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இது அதிகரித்து வருகிறது.

 அதற்கு சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் திட்டமிட்டு பரப்புகின்ற சாதி பெருமை அரசியல் தான் காரணம். இதனை தடுப்பதற்கு தேசிய அளவில் ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்திய ஒன்றிய அரசும் இந்த கோரிக்கையை பொருட்படுத்தவில்லை மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாடு உட்பட இந்திய ஒன்றிய அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்றலாமா  என்கிற கருத்தை மாநில அரசிடமிருந்து கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள் அதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கருத்து எதுவும் சொல்லவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

 இதற்கிடையிலே உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஆணவக் கொலைகள் தொடர்பாக சில வழிகாட்டுதல்களை தந்திருக்கின்றார்கள் எப்படி வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எப்படிப்பட்ட இழப்பீடுகளை தர வேண்டும் காவல்துறை அதிகாரிகளின் உடனடி கடமைகள் என்ன என்பன போன்ற வழிகாட்டும் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கூட தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக நேற்று உள்துறை அமைச்சர் அமிச்சாவை சந்திக்க முயற்சித்தோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை அவரது அமைச்சகத்தில் நாங்கள் இந்த சம்பவம் குறித்து கோரிக்கை வலியுறுத்தியுள்ளோம். உடனடியாக ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.

நெல்லை கவின் ஆணவ படுகொலைக்கு தாமதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்வினை ஆற்றவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் , சம்பவம் நடந்த உடனேயே தகவல் வெளியாகிவிட்டது உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு கண்டனங்களை பதிவு செய்து விட்டோம் உடனடியாக காவல்துறை அதிகாரிகளை அணுகி இது தொடர்பாக கோரிக்கை எழுப்பியது விடுதலை சிறுத்தைகள் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றிருந்த சூழலில் உடனடியாக வர இயலாததால் தற்போது டெல்லியில் இருந்து இங்கு வந்துள்ளேன் அடுத்த விமானத்தில் தூத்துக்குடி சென்று கவின் குடும்பத்தாரை சந்திக்க உள்ளேன் மேலும் மாலை 3 மணி அளவில் எனது தலைமையில் நெல்லையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது.ஆணவ படுகொலைகள் வெறும் சட்டத்தால் மட்டுமல்லாமல் உளவில் உளவியல் ரீதியாக சமூக ரீதியாக மாற்றுவதற்கு என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,

சட்டம் என்பது ஒரு தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று அதுவே இயற்றப்படவில்லை அதுவே உயர் உளவியல் ரீதியாக ஆளும் தரப்பிலே அதிகார வர்க்கத்திலே ஒரு தயக்கம் இருக்கிறது இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது இந்தியா முழுக்க நடக்கிறது பெற்ற பிள்ளையை கூட கொடூரமாக படுகொலை செய்யக்கூடிய உளவியல் இருக்கிறது இதை ஒரு தேசிய அவமானமாக கருத வேண்டும். பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகிறது என்றால் சாதி எப்படி ஒரு மனநோயாக மாறி உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலிலே சட்டம் இயற்றுவதற்கு என்ன தயக்கம்.?

ஆணவக் கொலை என்பது தழுத்துகளுக்கு மட்டும் நடப்பது அல்ல மாற்று சாதியினரும் சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் ஆணவக் கொலை செய்கிறார்கள். எஸ் சி பி சி என்கிற அளவில் நிகழக்கூடியது அல்ல obc சமூகத்தினர் இடையே கூட சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் ஆணவ படுகொலை செய்யக்கூடிய சூழல் இங்கே நிலவி வருகிறது.

தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ,காவல்துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் எப்படியானவர்களாக இருந்தாலும் பெற்றோரின் உளவியல் என்பது சாதி கௌரவம் தான் தன்னுடைய குடும்ப கவுரவம் என்று எண்ணுகிறார்கள்.அதனை ஒழிப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர் , நாடக காதல் என்று சொல்பவர்கள் சொன்ன கருத்து இது உனக்கு என்ன தகுதி இருக்குது உனக்கு என்ன பொருளாதாரம் இருக்கிறது என்று ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பிரச்சனையாக காதலையும் காதலையும் காதல் திருமணங்களையும் பரப்புரை செய்ததன் விளைவாக இது போன்ற விவாதங்கள் நடக்கின்றன காதல் என்பது யாரும் சொல்லி வருவதல்ல திட்டமிட்டு தூண்டி உருவாக்க முடியாது ஆனால் அந்த அளவிற்கு பிற்போக்குத்தனமான பிரச்சாரம் இந்த மண்ணில் மேற்கொள்ளப்பட்டது அதனுடைய விளைச்சல் தான் இன்றைக்கு இந்த மாதிரியான பதிவு படுகொலைகள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.

தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தல் 1967 1977 போன்ற மாற்றத்தை உருவாக்கும் என்று விஜய் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்  

அவர் அப்படி எதிர்பார்க்கலாம் ஆனால் கிரவுண்ட் ரியாலிட்டி அப்படி இல்லை எம்ஜிஆர் காலத்தில் இருந்ததைப் போன்ற சூழல் தமிழ்நாட்டில் தற்போது கிடையாது அடுத்தடுத்து எத்தனையோ துறை கலைஞர்கள் அரசியலுக்கு வந்தார்கள் பெரும் செல்வாக்கோடு வந்தார்கள் ஆனால் மக்கள் அவ்வளவு இலகுவாக அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை தமிழ்நாடு திரைப்படத்தை நம்பி தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய மாநிலம் என்று விமர்சித்த காலம் மாறிப் போய்விட்டது அரசியல் விழிப்புணர்வுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச்சாகும் சமூகம் வெளிப்படைந்துவிட்டது யார் தேவையோ யார் தேவை என்று மக்கள் தேர்வு செய்வார்கள் 2026 தேர்தல் நமக்கு அதை உணர்த்தும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.