தமிழ்நாடு

பள்ளி மாணவர்களை பலமணி நேரம் அமைச்சரை பார்க்க வெயிலில் காக்கவைப்பு - அமைச்சராக இருந்த மட்டும் பத்தாது நேரத்தையும் கடைபிடிக்கனும்

கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட குழந்தைகள் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்ததால் சோர்வடைந்து காணப்பட்ட காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது

Malaimurasu Seithigal TV

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை வருகை தந்தார்.   

கோவை நேரு விளையாட்டு அரங்கில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை இழை சிந்தடிக் ஓடுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்றார். முன்னதாக அமைச்சரை வரவேற்கும் விதமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமான குழந்தைகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். அமைச்சர் காலை 10 மணிக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மதியம் 12 மணி ஆகியும் அமைச்சர் வர தாமதமானதமானது.

இதனால் காலை 8.30 மணி முதல் காத்திருந்த குழந்தைகள் வெயில் காரணமாக சோர்வடைந்தனர். அமைச்சருக்காக காத்திருந்த குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. சிறு குழந்தைகள் சோர்வடையும் வரை அவர்களை காத்திருக்க செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது