தமிழ்நாடு

தமிழர்களை வஞ்சிக்கும் கேரளா? நடந்தது என்ன?

தமிழக ஏல தோட்ட விவசாயிகளை கேரள அரசு வஞ்சித்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழக ஏல தோட்ட விவசாயிகளை கேரள அரசு வஞ்சித்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு  முடிவுக்கு வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக ஏல தோட்ட விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக தேனி மாவட்டம் கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் காவல் துறை சார்பில் ஓட்டுனர்கள் மற்றும் ஏல தோட்ட விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி, கோட்டாட்சியர் கௌசல்யா, உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் உமாதேவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்கள், தமிழக ஏல தோட்ட விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளை கேரள அரசு வஞ்சித்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளதென குறிப்பிட்டனர்.