தமிழ்நாடு

மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் கிங்ஸ் மருத்துவமனை - அமைச்சர் மா. சு தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் கிங்ஸ் மருத்துவமனையை கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Suaif Arsath

சென்னை கிண்டியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கொரானா தொற்று பரவல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாகவும், ஒரே நாளில் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று B1,b2, என 7 வகையாக பரவி வருவதாகவும், சென்னையில் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முதலமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும்  கொரானா சிறப்பு மையம் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும்,  மீண்டும் கிங்ஸ் மருத்துவமனையை கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.