கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 பேரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.
இந்த நிலையில், இன்று கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அம்மா பேரவை கோவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தன்னிடம் விசாரணை நடத்த தடைகோரிய அனுபவ் ரவியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.