shrikanth and krishna arrested 
தமிழ்நாடு

நடிகர்கள் கைது வழக்கு; “போலீசார் மீது கிளம்பும் புது சர்ச்சை” - சிக்கப்போவது யார்!?

இவ்வழக்கில் பிரதீப் வாக்குமூலமாக கொடுத்த நபர்களை கைது செய்யாமல் இருக்க ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு எஸ்.ஐக்கள் மற்றும்....

Saleth stephi graph

நடிகர்கள் கைது செய்யப்பட்ட போதை பொருள் வழக்கு விவகாரம், கைது செய்யாமல் இருக்க காவல் துறையினர் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நுங்கம்பாக்கம் மதுபான பார் தகராறு வழக்கானது, பின்னர் போதை பொருள் வழக்கு வரை சென்றது. இந்த விவகாரத்தில் அஜய் வாண்டையார், பிரசாத், போதை பொருள் சப்ளையர் பிரதீப், போதை பொருள் பயன்படுத்தியதாக  நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

போதை பொருள் சப்ளையரான பிரதீப் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தான் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவ்வழக்கில் பிரதீப் வாக்குமூலமாக கொடுத்த நபர்களை கைது செய்யாமல் இருக்க ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தை சேர்ந்த  இரண்டு எஸ்.ஐக்கள் மற்றும் ஒரு காவல் ஆய்வாளர் லட்சக்கணக்கில் லஞ்சமாக பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சம்மந்தப்பட்ட நபர்களுக்கு வெறும் சம்மன் மட்டுமே கொடுத்து விசாரணை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. சுமார் 50லட்சம் வரை கைமாறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விலக்கு காவல் நிலைய, இரண்டு எஸ்.ஐக்கள் அருள்மணி,ராமகிருஹ்னன் மற்றும் திருவல்லிக்கேனி காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுதாகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உயரதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது வங்கி கணக்கையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.