தமிழ்நாடு

மக்களை சாதி, இனம், மொழி பெயரால் பிரிக்க முயற்சி... பா.ஜ.க. மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு...

மக்களை சாதி, மதம்,இனம்,மொழி ஆகியவற்றின் பெயரால் பிரிக்க பா ஜ க முயற்சிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஓ.வி.ஆர் ரஞ்சித், அடங்கா அன்பு ஆகியோர் ஒருங்கினைப்பில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா சென்னை சத்திய முர்த்தி பவனில் நடைபெற்றது.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்,மகாராஷ்டிரா மாநில எரிசக்திதுறை அமைச்சர் நிதின் ராவத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று  வாழ்த்துரை வழங்கினர்.

அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, மக்களை சாதி, மதம், இனம்,மொழி ஆகியவற்றின் பெயரால் பா.ஜ.க. பிரிக்க நினைப்பதாக விமர்சித்தார்.