தமிழ்நாடு

காவிரி விவகாரம்; "கர்நாடக பாஜகவினர்தான் பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர்" கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

Malaimurasu Seithigal TV

கர்நாடக மக்களோ பிற கட்சியினரோ அங்கு பிரச்சனை ஏற்படுத்தவில்லை கர்நாடக பாஜகவினர்தான் அங்கு பிரச்சனை ஏற்படுத்தி வருகின்றனர் என இந்திய தேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள், காமராஜர் அவர்களின் 46வது நினைவு நாள் மற்றும் முன்னாள் பிரதமர்  தலைவர் லால் பகதூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மூவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் பொன் கிருஷ்மூர்த்தி, உ பலராமன், மாநில பொது செயலாளர் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், தமிழ்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுமதி அன்பரசு, மாநில செயலாளர்கள் கடல் தமிழ்வானன், சேப்பாக்கம் அன்பழகன், வர்த்தக காங்கிரஸ் மாநில பொது செயலாளர் தனிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி,  காவிரி விவகாரத்தில் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி மட்டும்  நாடகம் ஆடி வருகிறது.  இன்றைய நிலை பொருத்தவரை காவிரியில் இருந்து நமக்கு எவ்வளவு தண்ணீர் வரவேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும், காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையமும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. 


உச்ச நீதிமன்றமும், காவேரி மேலாண்மை ஆணையமும் சொல்வதைதான் ஏற்றுக்கொள்ள முடியும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மிக ராஜதந்திரத்தோடு காவிரி விவகாரத்தை கையாளுகிறார். தொடக்கத்தில் 15,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது் பின்னர் 5000 கன அடி மற்றும் 4000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை முதலமைச்சரிடம், "உங்கள் கூட்டணி ஆட்சியின் நடக்கிறது. என்று நீங்கள் நினைத்தால் தன்னீர் வந்துவிடும்" என்று கூறியுள்ளார். ஆனால், கர்டநாடக பாஜக தலைவர்களான எடியூரப்பாவும், பசவராஜ் பொம்மையும் காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  அங்கே கலவரத்தை  உண்டாக்கினர். பாரதிய ஜனதாவினர்தான் இந்த பிரச்சினையை செய்தார்கள் இதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தாரா? நமது மாநிலத்திற்கு தண்ணீர் வருவதை தடுத்தற்காக அவர் அதனை எதிர்க்கவில்லை. 

தண்ணீர் திறக்கும் சமயத்தில் கர்நாடக பாரதிய ஜனதாவினர் பிரச்சினை செய்து வருகின்றனர். அவர்கள் வேறு வேறு உருவங்களில் அதை செய்தாலும் அவர்கள் தான் செய்கிறார்கள். இப்போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை. வெறும் 4 பேர் 5 பேர் மட்டுமே இருந்து இந்த போராட்டங்களை செய்கின்றனர். இது பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுலாகும் என குற்றம் சாட்டினார். 

அணையின் அளவு எவ்வளவோ அதற்கு ஏற்ப அளவிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையம் தெளிவாக கூறி இருக்கிறது. கர்நாடக துணை முதலமைச்சர் காவிரி விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் 15 ஆயிரம் கன அடி திறந்து விட்டுள்ளனர். பின்னர் ஐந்தாயிரம் கன அடி, 4 ஆயிரம் என இன்றைக்கும் திறந்து வைத்திருக்கிறார்கள் எனக் கூறினார். 

துணை முதல்வர் சிவகுமார் அங்கு காவிரி நிர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது நாங்கள் இங்கு தமிழக காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம், அப்படி இருக்க எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் கர்நாடகத்தில் எதிரப்பு தெரிவித்த போது ஏன் இங்க இருந்து அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். 

கர்நாடகா அரசு சட்டப்படி நமக்கு தண்ணீர் கொடுப்பார்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனல் தமிழகத்திற்கு தண்ணீர் வருவதை ஏன் தடுக்கின்றீர்கள்? என கர்நாடக பாஜகவினரைப் பார்த்து வாய்திறந்து கேட்க முடியாதவர் தான் தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை என குற்றம் சாட்டினார்.