தமிழ்நாடு

குலசேகரபட்டினம் தசரா கொண்டாட்டம் கோலாகலம்... வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்தி வரும் பக்தர்கள்...

குலசேகரபட்டினத்தில், தசரா திருவிழாவை முன்னிட்டு, மாலை அணிந்த பக்தர்கள் , பல்வேறு வேடமணிந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

தசரா திருவிழாவின் 8-ம் நாள் நிகழ்வாக, குலசேகரபட்டினத்தில் முத்தாரம்மன், கஜலட்சுமி அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழாவின் எட்டாம் நாள் நிகழ்வாக, அம்பாளின் கமல வாகன உலா நடைபெற்றது. இதையொட்டி, கஜலட்சுமி அலங்காரத்தில் கமல வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள், கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாயையொட்டி, பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம், ராஜா, ராணி வேடம் என பல்வேறு விதமான வேடங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் குழுக்களாக சென்று உள்ளூர்களில் வலம் வரும் பக்தர்கள், பொதுமக்களிடம் காணிக்கைகளை சேகரிக்க தொடங்கியுள்ளனர். தசரா திருவிழாவால் குலசேகரபட்டினம் பகுதியில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதேபோன்று, தசரா விழாவை முன்னிட்டு,கோவையில் விரதத்தை தொடங்கிய பக்தர்கள், காளி, சிவன், பார்வதி, பிரம்மன் உள்ளிட்ட  வேடமணிந்து, பொதுமக்களிடம் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.