தமிழ்நாடு

கடைசி நாள் கூட்டத்தொடர்...ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் புறகணிப்பு...!

Tamil Selvi Selvakumar

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் புறக்கணித்துள்ளனர்.

கடைசி நாள் பேரவைக்கூட்டம் :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை அன்றைய தினம் ஆளுநர் உரையால் சர்ச்சையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் கடைசி நாளாக இன்றும் சட்டப்பேரவை கூடியது. 

முதல் நிகழ்வு :

இதில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ உக்கரபாண்டி ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வினாக்கள்  விடைகள் நேரம் தொடங்கியது.

எ.வ.வேலு பதில் :

அப்போது, எம்.எல்.ஏ பொன்னுசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கொல்லிமலையில் நெடுஞ்சாலைத்துறையின் புதிய அலுவலகம் அமைக்க நடப்பாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தங்கம் தென்னரசு பதில் :

இதைத்தொடர்ந்து சர்வதேச தரத்தில் வர்த்தக மையம் அமைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த  தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓசூரில் சர்வதேச தரத்தில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இபிஎஸ் - ஓபிஎஸ் புறக்கணிப்பு:

இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்க இருந்த நிலையில், அதனைப் புறக்கணித்து விட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் சென்றார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.