திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற திட்டத்தை இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் திமுக பவள விழா ஆண்டை முன்னிட்டு திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்று திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் ஜுன் மூன்றாம் தேதி வரை உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் துண்டறிக்கை மூலமாகவும், திண்ணை பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம் அமைத்தும், வீடு தோறும் தேடி சென்று புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் திமுக சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெற்றிவாகை சூடிய ராஜஸ்தான் ராயல்ஸ்...!!!