தமிழ்நாடு

ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசிகள் 22 பேர் விடுதலை…தமிழ்நாடு அரசு உத்தரவு!

Malaimurasu Seithigal TV

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு  ஆயுள் தண்டனை சிறை கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உத்தரவு வழங்கியிருந்தது. அதன்படி மதுரை சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 24 ஆம் தேதி நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்

அண்ணா பிறந்த நாளன்று ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை அடிப்படையில் சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கமான நிகழ்வு தான் அதன் அடிப்படையில் தான் இன்று செப்டம்பர் 24ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 22 சிறை கைதிகளை மதுரை மாவட்ட சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.