மாநில குடும்பத் தரவு தளத்தை தயார் செய்ய அரசு முடிவு:
தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் சார்ந்த அனைத்து தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறைகளால் தனித் தனியாக சேமித்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு மாநில குடும்பத் தரவு தளத்தை தயார் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது, தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளைக் கொண்டு ஒருங்கிணைப்பு மாநில குடும்பத் தரவு தளத்தை தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | டெல்லி ஒன்றும் எங்களை இயக்கவில்லை: அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு - அரசியலில் மாற்றத்தை உருவாக்குமா ?
மேலும், இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவுள்ளதாகவும், இதில் அனைத்து துறைகளின் தரவுகளையும் ஒருங்கிணைத்து இந்தத் தரவு தளம் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் ஐடி:
அதிலும் குறிப்பாக, இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி , ஒவ்வொரு குடிமக்களுக்கும் தனித்துவமான மக்கள் ஐடி வழங்கப்படும் என்றும், அந்த ஐடி 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்டதாக இருக்கும் என்றும், இந்த ஒரு எண்மூலம் அனைத்து சேவைகளையும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, இந்த தரவுத் தளம் தயார் செய்வதற்கான டெண்டரை மின் ஆளுமை முகமை கோரியுள்ளது. எனவே, இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.