தமிழ்நாடு

சுடுகாட்டில் கள்ளதனமாக மது விற்பனை...காவல்துறையை கண்டதும் ஓட்டம் பிடித்த மதுப்பிரியர்கள்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே, முழு ஊரடங்கை பயன்படுத்தி சுடுகாட்டில் விற்கப்பட்ட கர்நாடகா மதுப்பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் மாநில எல்லையில் அமைந்திருப்பதால் கர்நாடகா மாநில மதுப்பாக்கெட்டுகள் எளிதில் கிடைக்கும் வகையில் கள்ளதனமாக விற்கப்பட்டு வருகிறது..

கர்நாடகா மாநிலத்தில் சனி,ஞாயிறு முழு ஊரடங்கு என்றும், தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு என அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் கர்நாடகா மாநிலத்தில் 35 ரூபாய்க்கு விற்கக்கூடிய மதுப்பாக்கெட்டுகளை, முன்கூட்டியே பெற்று வந்த விற்பனையாளர்கள், இன்று பாகலூர் சுடுகாட்டு பகுதியில் ஒரு மதுப்பாக்கெட் 150 ரூபாய் என விற்பனை செய்துள்ளனர்

இந்தகவல் பாகலூர் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், சுடுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். போலீசார் வருவதை பார்த்ததும் பதற்றமடைந்த விற்பனையாளர்கள், மதுப்பாக்கெட்டுகளை அங்கேயே போட்டுவிட்டு  தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.அவர்களுடன் சேர்ந்து குடித்துக்கொண்டிருந்த குடிமகன்களும் ஓட்டம் பிடித்தனர்.

இதனைகண்ட போலீசார், மதுபாக்கெட்டுகளை கைப்பற்றி அதை விற்பனை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.