தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று முழு ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து,மெட்ரோ ரயில்கள் ,மின்சார ரயில்கள் ,மதுகடைகள் இயங்காது.
இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதாவது சென்னையில் ரூ.50 கோடிக்கும், திருச்சியில் ரூ.42.59 கோடிக்கும்,சேலத்தில் ரூ.40.85 கோடிக்கும், மதுரையில் ரூ.43.20 கோடிக்கும், கோவையில் ரூ.41.28 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.