dmk and congress  
தமிழ்நாடு

காங்கிரஸ் போட்டியிடும் 23 தொகுதிகள் அறிவிப்பு… சூலூர் முதல் ஓமலூர் வரையிலான 5 தொகுதிகளால் மீண்டும் இழுபறி!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில்...

Mahalakshmi Somasundaram

தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறக்கும் தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகி வரும் நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் ஒரு வழியாக காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கக்கூடும் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனைகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியிலேயே நீடிப்பது என காங்கிரஸ் தலைமை இறுதி முடிவு எடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது. அதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு  28 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் போட்டியிடும் 23 தொகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

1. கிள்ளியூர்

2. குளச்சல்

3. விளவங்கோடு

4. ஸ்ரீவைகுண்டம்

5. காரைக்குடி

6. திருவாடானை

7. நாங்குநேரி

8. ஊத்தங்கரை

9. பொன்னேரி

10. சோளிங்கர்

11. கடலூர்

12. மயிலாடுதுறை

13. அறந்தாங்கி

14. காரைக்குடி

15. சிவகாசி

16. வேளச்சேரி

17. துறையூர்

18. ஊட்டி

19. கிருஷ்ணகிரி

20. ஆத்தூர்

21. ஸ்ரீபெரும்பதூர்

22. ஈரோடு கிழக்கு

23. சிங்காநல்லூர்

மேலும் சூலூர், எழும்பூர், மேலூர், ஓமலூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட 8 தொகுதிகளில் 5 தொகுதிகளை கேட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆனால் அந்த தொகுதிகளை கொடுக்க  மறுத்து திமுக அதற்கு பதிலாக வேறு தொகுதிகளை கொடுக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.