தமிழ்நாடு

சிறாா்களுக்கான  இலக்கிய திருவிழா...வெற்றிபெற்றால் வெளிநாட்டு பயணம்...

Malaimurasu Seithigal TV

சிறாா்களுக்கான  இலக்கிய திருவிழா...வெற்றிபெற்றால் வெளிநாட்டு பயணம்..

2023-ஆம் ஆண்டுக்கான சிறாா் இலக்கிய திருவிழாவில் வெற்றி பெரும் மாணவா்களை  வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்  அழைத்து செல்வோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சாா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளாா். 

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான சிறாா் இலக்கிய திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள்  கலந்து கொண்டு அவா்களது திறமைகளை வெளிபடுத்தினா்.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அமைச்சா் அன்பில் மகேஷ் பள்ளி மாணவா்களிடம்  ஒளிந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரவே இந்த சிறாா் இலக்கிய திருவிழா நடத்தபடுவதாக தொிவித்தாா். 

இதனை தொடா்ந்து பேசிய அவா் மாணவா்கள் எடுக்கும் மதிப்பெண்களைக் கொண்டு அவா்களது திறமையை அளவிடக்கூடாது எனவும் அதையும் தாண்டி பல திறமைகள் மாணவா்களிடம் ஒழிந்து கிடக்கிறது எனவும் கூறினாா்.  மேலும் அதை வெளிக்கொண்டு வரவே இந்த இலக்கிய திருவிழா வருடந்தோறும் இந்நிகழ்ச்சி  நடத்தப்பட்டு வருகிறது என பேசினாா். திறமைகளை கொண்டு சிறாா்களுக்கான இந்த இலக்கிய திருவிழாவில் வெற்றி பெரும் குழந்தைகளை வெளிநாட்டுக்கு சுற்று பயணம் அழைத்து செல்வோம் எனவும் அமைச்சா்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவதித்துள்ளாா்.