தமிழ்நாடு

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதலர்கள்..! பெற்றோர் தாக்க முயல்வதாக புகார்..! சமரசம் பேசி அனுப்பிய காவலர்கள்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பெற்றோர் தங்களை தாக்க முயல்வதாக காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Tamil Selvi Selvakumar

பொம்மநாயக்கன்பட்டி, மோலை வட்டம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரும், நாட்றம்பள்ளியை அடுத்த எம்ஜி நகர் பகுதியை சேர்ந்த அபிலாஷா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி சூர்யாவும் அபிலாஷாவும் வீட்டை விட்டு வெளியேறி, கோவை காந்தி நகரில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அபிலாஷாவின் பெற்றோர் இருவரையும் வீட்டுக்கு அழைத்து தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள காதலர்கள் பெற்றோர்  மீது புகார் தெரிவித்தனர். விசாரித்த காவல்துறையினர் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.