தமிழ்நாடு

இயற்கை எரிவாயு நிலையத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்...!

Tamil Selvi Selvakumar

ராணிப்பேட்டையில் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை, நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி "AG&P பிரதம்" நிறுவனம் இராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் கிராமத்தில் அமைத்துள்ள முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதன் மூலம் சுமார் 70 பகிர்மான நிலையங்களுக்கும், 30 ஆயிரம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.