தமிழ்நாடு

அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் நேரில் ஆஜராக சம்மன்!

அதிமுக முன்னாள் எம்.ஆர். விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Malaimurasu Seithigal TV

அதிமுக முன்னாள் எம்.ஆர். விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் ஜூலை 22-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி  நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக ஜூலை 21ஆம் தேதி கரூர், சென்னை உள்ளிட்ட 22 இடங்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் நிறுவனங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.