தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் எங்கும் மருந்து தட்டுப்பாடு இல்லை" மா சுப்பிரமணியன் பதில்!!

Malaimurasu Seithigal TV

எடப்பாடி பழனிசாமிக்கு நாய்க்கடி ஏற்பட்டால் தாராளமாக அரசு ஆரம்ப சுகாதார மையங்களிலேயே நாய் கடிக்கான மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்பொழுது பேசிய அவர், ஆளுமைக்கான தலைமை பண்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு இல்லாத நிலையில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் மா சுப்பிரமணியன் குறித்து நேற்று விமர்சித்து பேசியிருந்தார். அவர், சுகாதாரத்துறை மந்திரியாக அல்லாமல் விளையாட்டுத்துறை பயிற்சியாளராக செயல்படுகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், பாம்பு கடி மற்றும் நாய் கடித்தால் போடப்படும் மருந்து இந்த இரண்டரை ஆண்டில் தான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது , எடப்பாடி பழனிச்சாமிக்கு நாய் கடித்தால்  கூட ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே ஊசி போடும் அளவுக்கு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நேரடியாக அவரே சென்று ஆய்வு செய்யட்டும் என்று கூறியுள்ளார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.