மெட்ராஸ் ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு விதிக்கப்பட்ட சொத்துவரி 3 கோடியே 60 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் 4 வாரத்தில் 35 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் 6 வாரத்துக்குள் புதிதாக சொத்து வரி வசூல் கணக்கிட்டு மாநகராட்சி சார்பில் புதிய நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், அதன் படி சொத்துவரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.