தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் முன்னாள் தலைவரின் நினைவுதினம்...மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்!

Tamil Selvi Selvakumar

மதுரை எய்ம்ஸ் முன்னாள் தலைவர் நாகராஜனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் முன்னாள் தலைவர் மற்றும் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்களின் மாமனார்  நாகராஜனின் முதலாம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், மறைந்த மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் குடும்பத்தின் சார்பாக அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் பிரிவு பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வழங்கினார். 

இந்த நிகழ்வில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.