மதுரை சத்யசாய்நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் நிகழ்ச்சி உள்பட பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாக நாளை மதுரை வருகிறார். இதையொட்டி விமான நிலையம் முதல் மாநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கேமராக்கள் மூலம் மக்கள் கண்காணிக்கப்பட்டு, வாகன தணிக்கையும் நடந்து வருகிறது.
அதுதவிர அவர் தங்கும் விடுதிகளிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே அவர் செல்லவுள்ள சாலைகளையும் தூய்மை செய்து, தெரு விளக்குகளையும் சீரமைக்க மாநகராட்சி உதவி ஆணையராக இருந்த சண்முகம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எம்பிக்கள் வெங்கடேசன, மானிக்தாகூர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சண்முகம் மாநகராட்சி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.