மதுரையில் நடந்த சிபிஐ(எம்) மாநாட்டுல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசின பேச்சு, அரசியல் வட்டாரங்கள் பெரிய அளவுல பேசுபொருளா மாறியிருக்கு. இந்த மாநாடு, இந்தியாவுல கூட்டாட்சி தத்துவத்தை மீட்டெடுக்குறதுக்கும், மாநில உரிமைகளை வலியுறுத்துறதுக்கும் ஒரு முக்கியமான மாநாடா கருதப்படுது.
இதுல முதலமைச்சர் பேசுனா கருத்துக்கள், தமிழ்நாட்டோட அரசியல் நிலைப்பாட்டையும், திராவிட மாடல் இயக்கத்தோட கொள்கையை எடுத்துரைக்குற விதமா இருந்தது. ஆனா, இந்த பேச்சு வெறும் அரசியல் பேசுறதோட முடியாம, அதையும் தாண்டி ஆழமான சமூக, அரசியல் பின்னணிய சொல்லுது.
சிபிஐ(எம்) மாநாடு மதுரையில நடந்தது, இதில் தமிழ்நாட்டுல திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் எப்பவுமே மக்களுக்காக போராடும் னு முதலமைச்சர் சொன்னது, இந்த இரண்டு கட்சிகளும் எப்பவும் சகோதரத்துவத்துடன் இருக்குறத நிரூபிக்கிற விதமா இருந்தது, "இந்த மண்ணும் மக்களும் உயர்வு பெற சமத்துவக் கொள்கைகளே வேண்டும்"னும், தமிழ் மக்களோட உயர்வுக்கு தேவையான எல்லாத்தையும் திராவிட அரசு எப்பவும் செய்துகிட்டே இருக்கும் என்றும், முதலமைச்சர் பேசி இருக்குறது மத்த எதிர் காட்சிகளுக்கு சவாலா இருந்தது.
இந்த பேச்சு, ஒன்றிய அரசோடு கருத்துக்களை எதிர்க்கிற விதமாவும், அவர்களுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடையே தெளிவுபடுத்துற மாதிரியும் இருந்துச்சி. அதுலயும் குறிப்பா முதலமைச்சர் "ஒன்றிய அரசால அதிக பாதிப்படையுறது நானும், கேரள முதல்வரும்தான்"னு சொன்னது அவரோட ஒரு கட்சி கூட்டணி தந்திரமாவே பார்க்கபட்டுச்சி, மாநில உரிமைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தோட தொடக்கம இது இருக்கும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க. இந்த பேச்சு தமிழ்நாட்டோட மக்களுக்கு மட்டும் , இல்லாம இந்தியா முழுக்க உள்ள மாநிலங்களும் அவங்க மாநிலங்களுக்காக செயல்படனும் என ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருந்தாரு.
இதுல முக்கியமான விஷயம், கூட்டாட்சி தத்துவத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை முதலமைச்சர் வலியுறுத்தினதும் . "இந்தியாவுல கூட்டாட்சி மலரணும், அதுக்கு சக்திகளை திரட்டுவோம்"னு சொன்னதும் தான், ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துற மாதிரி இருந்தது. இது ஒரு பக்கம் ஒன்றிய அரசுக்கு எதிரான விமர்சனமா இருந்தாலும், மறுபக்கம் மாநில அரசுகளை ஒருங்கிணைக்கிற முயற்சியா இருந்தது. இதுல தென்னிந்திய முதலமைச்சர்களோட ஒரு கூட்டமைப்பு உருவாக்கணும்னு சொன்னது, அரசியல் உத்தியா மட்டுமில்லாம, பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற விதமா இருக்கு.
இந்த பேச்சு, தமிழ்நாட்டோட அரசியல் எதிர்காலத்தை பற்றியதாகவும். ஒன்றிய அரசுக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்குற முயற்சியாகவும் இதை பார்க்கலாம். ஆனா, இது வெறும் அரசியல் ஆட்டமா, இல்ல மக்களோட நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாவும் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்